ரோஜர் பெடரர் முதல் இடம்  !

Monday, February 19th, 2018

டென்னிஸ் போட்டிகள் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தனது 36வது வயதில் முதல் இடத்தை பிடித்துக் கொண்டார்.

ரோட்டர்டாம் பகிரங்க டெனிஸ் தொடரில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு நுழைந்துள்ளதையடுத்தே, அவர் இவ்வாறு முதலிடத்தை பெற்றுள்ளது.

நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் பகிரங்க டென்னிஸ் தொடரின்  போட்டி ஒன்றில் ரோஜர் பெடரர், நெதர்லாந்து வீரர் ராபின் ஹாசை எதிர்க் கொண்டார்.

இதில் அவர் 4க்கு 6, 6க்கு 1 மற்றும் 6க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் முதலிடத்தில் இருந்த ரோஃபீல் நடலை அவர் பின்தள்ளியுள்ளார்.

Related posts: