ரொனால்டோ மீதான வன்புணர்வு வழக்கில் திருப்பம்!

Thursday, June 6th, 2019

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான வன்புணர்வு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு லாஸ் வேகஸ் ஓட்டலில் வைத்து ரொனால்டோ தன்னை வன்புணர்வு செய்ததாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த மயோர்கா என்ற பெண் புகார் அளித்தார்.

ஆனால், 34 வயதான மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் நட்சத்திரம் ரொனால்டோ, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.

கடந்த வருடம் சம்பவத்திற்குப் பின்னர் ரொனால்டோவிடம் பணம் பெற்றுக்கொண்டு இப்பிரச்சினையை முடிக்க தான் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால், அந்த நேரத்தில் தனது மனம் அதற்கு அனுமதிக்கவில்லை என மயோர்கா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த லாஸ் வேகாஸ் பொலிசார் விசாரணையை முன்னெடுத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் இந்த வழக்கை தானாகவே வாபஸ் பெறுவதாக குற்றம் சாட்டிய நபர் தரப்பில், லாஸ் வேகாஸ், நெவாடா மாநில நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், அந்த மனுவில் இப்பிரச்சினை பணம் மூலம் தீர்க்கப்பட்டதா என்ற தகவல் ஏதும் குறிப்பிடவில்லை. இந்நிலையில், ஜீவண்டிஸ் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான வன்புணர்வு வழக்கு கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: