ரொனால்டோவை கருவில் இருக்கு போதே கலைக்க நினைத்த தாய்!

கால்பந்து உலகில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோ. அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் ரொனால்டோ கால்பந்து வீரர் என்பதையும் தாண்டி அவர் ஒரு பிளே பாய் என்பது எத்தனை பெருக்கு தெரியும், என்பது தெரியவில்லை.
மளிகைக் கடை பட்டியல் போல நீளும் அவரது கேர்ள் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட். கல்யாணம் ஆகவில்லை. குழந்தை உண்டு. அப்பன் இருந்தும், அம்மா யாரெனத் தெரியாமல் வளர்வது ரொனால்டோவின் குழந்தை மட்டுமாகத்தான் இருக்கும்.
எனக்கு தந்தை ஆக வேண்டும் என ஆசை இருந்தது. குழந்தை பெற்றுக்கொண்டேன். ஆனால், என் மகனின் தாய் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நேரம் வரும்போது என் மகனிடம் மட்டும் அதைச் சொல்வேன். அவனும் புரிந்து கொள்வான் என நம்புகிறேன் என ரொனால்டோ விளக்கம் சொல்லியதாக கூறப்படுகிறது.
ஜூனியர் ரொனால்டோ மட்டுமா? கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறப்பும் விசித்திரமானது என்று கூறப்படுகிறது.
CR7 வயிற்றில் இருக்கும்போது, அந்த கருவைக் கலைக்க நினைத்தாராம் அவர் தாய். ஆம், கருவிலேயே கலைக்க நினைத்த குழந்தைதான் இன்று கால்பந்து உலகை ஆள்கிறது என்றால் மிகையல்ல
Related posts:
|
|