மேற்கிந்திய தீவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!

Monday, June 6th, 2016
முக்கோணத் தொடரின் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான முக்கோணத்தொடரின் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
மேற்கிந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சார்லஸ் 22 ஓட்டங்களையும் பிராத்வேட் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரெலிய அணி சார்பாக லையோன் மற்றும் சாம்பா  தலா 3 விக்கட்டுக்களை பை்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர் 25.4 பந்து ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியை பெற்றுக்கொண்டனர்.
இதில் அவுஸ்திரேலிய அணி சார்பாக வோர்னர் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் ஸ்மித் 27 ஓட்டங்களையும் பெற்றக்கொண்டனர்.இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியாவின் லையோன் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை இந்த வெற்றியின் மூலம் மேலதிக  ஒரு புள்ளியுடன் சேர்த்து 5 புள்ளிகளுடன்  அவுஸ்திரேலிய அணி முதலிடத்திலும் மேற்கிந்திய தீவுகள் 4 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் தென்னாபிரிக்க அணி எவ்வித புள்ளிகளுமின்றி 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: