மேற்கிந்தியதீவு ஏ அணி 333 ஓட்டங்களால் அபார வெற்றி!

Saturday, October 15th, 2016

 

இலங்கை ஏ அணிக்கு எதிரான உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் ஆட்டத்தில் சுற்றுலா மேற்கிந்திய தீவு ஏ அணி 333 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 1–1 என சமன் செய்தது.

கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு தைனத்தில் ஆரம்பமான ஆட்டத்தில் இலங்கை ஏ அணிக்கு வெற்றி இலக்காக 481 ஓட்டங்கள் நிர்ணயித்தது. இலங்கை ஏ அணி சகல விக்கெட்டையும் இழந்து 147 ஓட்டங்களை குவித்தது.

கடந்த 11ம் திகதி ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 509 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 245 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.இலங்கை அணிக்கு 481 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.இலங்கை அணி 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இரு அணிகளும் மோதும் 3 ஆவது டெஸ்ட் போட்டி 18 ம் திகதி ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெறும்.

col13190150246714_4886520_14102016_aff

Related posts: