மேர்கன்- ஹேல்ஸ் பங்களாதேஸ் தொடரிலிருந்து விலகல்!

Monday, September 12th, 2016

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர்களான இயோன் மோர்கன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பங்களாதேஸ்  சுற்றுப் பயணத்தில் இணைந்து கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இங்கிலாந்து கிரிக்கட் அணி பங்களாதேஸிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தில் சில இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க விரும்பவில்லை என அறிவித்துள்ளனர். பங்களாதேஸில் இடம்பெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு தீர்மானித்துள்ளனர். பங்களாதேஸில் இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

cook_1959367g

Related posts: