மெஸ்ஸி, ரொனால்டோவை ஊதி தள்ளிய கிரீஸ்மேன்!

Wednesday, October 26th, 2016

லா லிகா 2015/16 ஆண்டிற்கான சிறந்த வீரராக அத்லெட்டிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரர் கிரீஸ்மேன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிரீஸ்மேன், பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்ஸி மற்றும் ரியல் மாட்ரிட் நட்சத்திரம் ரொனால்டோ ஆகியோரை ஊதி தள்ளி இவ்விருதை தட்டிச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், பார்சிலோனா அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜென்டீனா சர்வதேச நட்சத்திரம் மெஸ்ஸி சிறந்த முன்னணி வீரர் விருதை தட்டிச்சென்றுள்ளார்.

மேலும், அத்லெட்டிகோ மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் டியாகோ சிமியோன் சிறந்த பயிற்சியாளராகவும், சிறந்த கோல் கீப்பராக அத்லெட்டிகோ வீரர் Jan Oblakக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பியர் அல்லாத சிறந்த வீரராக பார்சிலோனாவின் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதில், ரொனால்டோ இடம்பெற்றுள்ள ரியல் மாட்ரிட் அணிக்கு ஒரே ஒரு விருது மட்டுமே கிடைத்துள்ளது. ரியல் மாட்ரிட் வீரர் Luka Modric சிறந்த மிட்பீல்டராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: