முரளிதரன் சிறந்த பந்துவிச்சாளர் ஆனால் அஸ்வின் பந்துவீச்சு வேறு  – திலன் சமரவீரா!

Monday, February 13th, 2017

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனையும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினையும் ஒப்பிட்டு பேச முடியாது என்று வங்கதேச துடுப்பாட்ட பயிற்சியாளர் திலன் சமரவீரா தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் வங்கதேச துடுப்பாட்ட பயிற்சியாளர் திலன் சமரவீரா, முரளிதரன் மற்றும் அஸ்வின் குறித்து கூறியுள்ளார்.

அதில், முரளிதரன் டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். டெஸ்ட் அரங்கில் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக வலம் வந்துள்ளார். தற்போது அதை விரட்டி பிடிக்கும் முயற்சியில் அஸ்வின் களமிறங்கியுள்ளார்.

டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முரளி இலங்கை அணிக்கு கிடைத்த பரிசு என்றும் அவர் ஒரு திறமையான பந்துவீச்சாளர் என கூறியுள்ளார்.

முரளிதனுடன், அஸ்வினை சேர்த்துப்பார்க்கையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அஸ்வின் ஒரு Smart Player அதாவது வேவ்வேறு விதமாக பந்து வீசும் திறன் உடையவர், ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னுடைய பந்துவீச்சை மெருக்கேற்றிக்கொண்டு வருகிறார். மேலும் துல்லியமாக லைனில் வீசுவார் என்றும் கூறியுள்ளார்.

இதனால் முரளிதரன் பந்துவீச்சு வேறு அஸ்வினின் பந்துவீச்சு வேறு, இந்த இருவருடைய பந்துவீச்சுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என கூறியுள்ளார்.

201609021714348318_Thilan-Samarweera-Appointed-Bangladesh-Batting-Consultant_SECVPF

Related posts: