முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு!

Monday, February 5th, 2018

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

சிட்டகொங்கில் இடம்பெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 513 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.பங்களாதேஷ் அணி சார்பில் Mominul Haque அதிகபட்சமாக 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதன்படி , பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட் இழப்பிற்கு 713 ஓட்டங்களைப் பெற்றது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ், டி சில்வா, ரொஷேன் சில்வா ஆகியோர் முறையே 196, 173 மற்றும் 109 ஓட்டங்களை பெற்று கொடுத்து ஆட்டமிழந்தனர்.

200 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி நேற்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது 3 விக்கட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.அதன்படி, போட்டியின் இறுதி நாளான இன்று 119 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி ஆட்ட நாள் நிறைவின் போது 5 விக்கட் இழப்பிற்கு 307 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.பங்களாதேஸ் அணி சார்பில் Mominul Haque 105 ஓட்டங்களையும் Liton Das 94 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.பந்த வீச்சில் ரங்கன ஹேரத் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.அதன்படி , இலங்கை அணியை விட 107 ஓட்டங்கள் பங்களாதேஷ் அணி முன்னிலையில் உள்ள நிலையில் , போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது

Related posts: