முதல் இனிங்ஸில் இலங்கை அணி 494 ஓட்டங்கள் குவிப்பு…!

Thursday, March 9th, 2017

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் வங்கதேச அணி சற்று முன்னர் வரை விக்கட் இழப்பின்றி 107 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும இழந்து 494 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 194 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மெஹிடி ஹசன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

மேலும் கருணாரட்ண 30 ஓட்டங்களையும் , நிரோசன் திக்வெல்ல 75 ஓட்டங்களையும் , அசேல குணரட்ன 85 ஒட்டங்களையும் மற்றும் தில்ருவன் பெரேரா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் வங்கதேச அணி தற்போதைய நிலையில் விக்கட் இழப்பின்றி 107 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தமின் ஹிக்பால் 55 ஓட்டங்களுடனும் , சௌம்யா சர்கர் 52 ஓட்டங்களுடனும் தற்போது களத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: