முதலாவது இன்னிங்ஸில் 386 ஓட்டங்களை பெற்றது இலங்கை !

Monday, November 22nd, 2021

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 386 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதற்கமைய, முதல் விக்கெட்டுக்காக பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் திமுத் கருணாரத்ன இணைப்பாட்டமாக 139 ஓட்டங்களைப் பெற்றனர்.

பெதும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததையடுத்து, இணைப்பாட்டம் சரிந்தது.

அதன் பின்னர் ஓஷத பெர்னாண்டோ மற்றும் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தனஞ்சய டி சில்வா, தலைவர் திமுத் கருணாரத்னவுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

இந்நிலையில், தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததுடன்,  அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 6 ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்த வேளையில், ​​15 பவுண்டரிகள் உள்ளடங்களாக 147 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தினேஷ் சந்திமால் 45 ரன்களில் ஆட்டமிழந்திருந்த நிலையில், அதன் பின்னர் எந்தவொரு இலங்கை துடுப்பாட்ட வீரர்களும் பிரகாசிக்கவில்லை.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் இலங்கை அணி 133 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஜோமெல் வொரிக் 3 விக்கெட்டுகளையும், ஷெனொன் கேப்ரியல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

00

Related posts: