முதலாவது அரையிறுதி டெல்லியில்!

Thursday, March 24th, 2016

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதிப்போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் வருகிற 30-ஆம் திகதி  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் டெல்லி மைதானத்தில் 2 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஒரு கேலரி வரைபட திட்ட அனுமதியின்படி கட்டப்படாததால் தெற்கு டெல்லி மாநகராட்சி அதற்கு அனுமதி சான்றிதழ் அளிக்க மறுத்தது. இந்த விவகாரத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்குள் தீர்வு காணாவிட்டால் முதலாவது அரை இறுதிப்போட்டி டெல்லியை விட்டு வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை எடுத்து இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் டெல்லி மைதான சிக்கல் தீர்ந்து இருக்கிறது.

இது குறித்து டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் சேத்தன் சவுகான் நேற்று அளித்த பேட்டியில், ‘2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் எல்லா விதமான போட்டிகளையும் நடத்துவதற்கு தேவையான அனைத்து வகையான அனுமதி சான்றிதழ்களும் தெற்கு டெல்லி மாநகராட்சியிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. எனவே முதலாவது அரை இறுதிப்போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும். ஐ.பி.எல். போட்டிக்கும் பிரச்சினை எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.

Related posts: