முடிவால் எவ்வித வருத்தமும் இல்லை: வில்லியர்ஸ்!

Saturday, August 18th, 2018

சர்வதேச கிரிக்கெற் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி, அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இவர், அதிவேக சதம் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் திடீரென அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

டிவில்லியர்ஸ் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அவர் அதனை ஏற்க மறுத்தார்.

இந்நிலையில், தான் ஓய்வு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பால், தாங்க முடியாத நெருக்கடிக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். தங்களுக்குள்ளாகவும், ரசிகர்கள் மூலமாகவும், நாட்டின் மூலமாகவும், பயிற்சியாளர் மூலமாகவும் ஒவ்வொரு வீரருக்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

இது மிகப்பெரிய அளவில் வீரர்களின் மனநிலையில் அப்படியே இருக்கும். மிகப்பெரிய போட்டியில் சதம் அடித்த உணர்வை வேறு எதனுடனும் ஒப்பிட ஒன்றுமில்லை என்பது எனக்கு தெரியும்.

சதம் அடித்தமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெயரை குறிப்பிட்டு மகிழ்ச்சி குரல் எழுப்புவார்கள். இதை நான் Miss செய்யவில்லை. அணியில் இருந்து ஓய்வு பெற்றதால் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். உண்மையிலேயே எந்த வருத்தமும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Related posts: