முடியும் என நம்பினோம் சாதித்து இருக்கின்றோம் – ரோஹித் !

Thursday, May 25th, 2017

சிறிய இலக்கு என்றாலும் நம்மால் முடியும் என்று நம்பினோம் சாதித்து காட்டியிருக்கின்றோம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

பத்தாவது ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஒரு ஓட்ட வித்தியாசத்தால் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வீழ்த்தி மும்பை சம்பியனாகியது.

இந்த வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரோஹித் ஷர்மா,

கிரிக்கெட்டில் இது ஒரு மகத்தான ஆட்டம். இந்த போட்டியை இரசிகர்கள் நிச்சயம் உற்சாகமாக கண்டு இரசித்திருப்பர்.  இது போன்று சிறிய இலக்கை நிர்ணயிக்கும்போது முதலில் நம்மால் வெற்றி பெற முடியும் என்ற  உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியமாகும்.

முதல் பாதி ஆட்டம் முடிந்து ஓய்வறையில் வீரர்கள் மர்ரியில் பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முந்தைய ஆட்டத்தில் 107 ஓட்டங்களில் சுருட்டினோம். என்றால் புனே அணியையும் ஏன் நம்மால் மடக்க முடியாது. களத்தடுப்பில் சிறப்பாக செயற்படுங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள் என அணியின் வீரர்களை ஊக்கப்படுத்தினேன்.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை நாங்கள் எங்களது திறமைக்கு ஏற்ப செயற்படவில்லை. தனிப்பட்ட வீரர்களின் செயற்பாட்டால் சில ஆட்டங்களில் வெற்றி பெறலாம். ஆனால் சம்பியன் பட்டத்தை வசப்படுத்துவதற்கு அனைவரின் கடின உழைப்பும் அவசியம். வெற்றிக்கு நாங்கள் தனிப்பட்ட வீரரை ஒரு போதும் சார்ந்து இருந்ததில்லை. அதற்கு இன்றைய ஆட்டமே சரியான முன்னுதாரணம். கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: