மீண்டும் சயிட் அஜ்மல்!

Tuesday, September 20th, 2016

 

பாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சயிட் அஜ்மல் மீண்டும் அணிக்கு இடம் பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சயிட் அஜ்மலின் பந்து வீச்சு பாணி குறித்தும் அதன் பின்னர் விதிக்கப்பட்ட தடையில் மீண்டு வந்த அவருக்கு மீண்டும் அணிக்குள் இடம்பிடிக்க வாய்ப்புக்கள் காணப்படுபதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அவரின் இடத்தை டெஸ்ட் போட்டிகளில் யாசிர் ஷா பிடித்துள்ள நிலையில், ஒரு நாள் மற்றும் ‘ருவென்ரி – 20’ போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது.

உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் சயிட் அஜ்மல் கழகமட்ட ’ருவென்ரி – 20’ போட்டிகளில் பிரகாசித்து வருகின்றார். குறிப்பாக 8 போட்டிகளில் 20 விக்கெட்டுக்களை கைப்பற்றியிக்கின்றார்.

இவ்வாறு சிறந்த திறமையை வெளிக்காட்டிவரும் சயிட் அஜ்மல் மீண்டும் தேசிய அணிக்குள் இடம்பிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.

colsaeed-ajmal-720x480194647931_4782084_19092016_aff_cmy

Related posts: