மீண்டும் களமிறங்கிய அண்டி மரே!

Wednesday, May 31st, 2017

காயம் மற்றும் சுகவீனத்தில் இருந்து மீண்டு தற்போது சிறந்த நிலையில் விளையாட ஆரம்பித்துள்ளதாக, டென்னிஸ் வீரர் அண்டி மரே தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் டென்னிஸ் தரப்படுத்தலில் முதன்மைப் பெற்ற அண்டி மரே அதன் பின்னர் காயத்தினாலும் சுகவீனத்தாலும் பாதிக்கப்பட்டார் தற்போது பிரன்ச் பகிரங்க டென்னிஸ் போட்டித் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், தம்மால் சிறப்பாக விளையாட முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

இந்த வருடம் தமக்கு சரியாக ஆரம்பிக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் தம்மால் சிறப்பாக விளையாட முடியம்

தற்போது டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பெற்றுள்ள தாம் அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள எதிர்வரும் தொடர்களில் சிறப்பாக செயற்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்

இதேவேளை பிரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதற்சுற்றில் அண்டி மரே வெற்றி பெற்றுள்ளார் ரஷ்யாவின் அண்றி குஷ்நெட்சோவை எதிர்த்தாடிய இந்த போட்டியில் 6-4, 4-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்றார்

Related posts: