மீண்டும் அணியில் கெயில்!

Thursday, September 21st, 2017

உலகில் பல ரசிகர்களை கொண்ட பிரபல அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில், ஒருநாள் சர்வதேச போட்டிக்காக மீண்டும்   மேற்கிந்திய தீவுகள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களும், 5 மாதங்களும், 29 நாட்களின் பின்னர் குறித்த வீரர் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.அவர் இறுதியாக 2015 ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச போட்டியில் நியுசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியுள்ளார்.இந்நிலையில், நேற்றைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கிரிஸ் கெயில், 3 ஆறு ஓட்டங்களும், 2 நான்கு ஓட்டங்களுடன் 27 பந்துகளுக்கு 37 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.கெயில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் 18 வருடங்களும் 18 நாட்களும் சர்வதே ஒருநாள் போட்டிக்காக விளையாடியுள்ளார்.1979 ஆம் ஆண்டு பிறந்த கிறிஸ் கெயிலின் 37 வது பிறந்த நாள் நாளை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: