மிதாலி விவகாரம்: அதிருப்தியில்  கிரிக்கெட் ஜாம்பவான்!

Thursday, November 29th, 2018

இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், உலகக்கோப்பை டி20 போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய மகளிர் அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.

அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்திருந்த போதும், இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் மிதாலி ராஜ் அரையிறுதி போட்டியிலிருந்து நீக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு டி20 கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுரின் தலைக்கனமே இதற்கு காரணம் என ரசிகர்கள் பலரும் இணையதளங்களின் வாயிலாக கொந்தளிக்க ஆரம்பித்தனர். மிதாலிக்கு ஆதரவாக பல பிரபலங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்த மிதாலி, தான் அணியிலிருந்து நீக்கப்பட்டது உட்பட அனைத்திற்கும் காரணம் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் என வேதனை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மிதாலிக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், மிதாலிக்காக நான் வருந்துகிறேன். அவர் ஒரு நல்ல வீரர். 20 வருடமாக இந்திய அணிக்காக விளையாடுகிறார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதை வாங்கியுள்ளார்.

அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த போட்டிக்கு அவர் தயாராகிவிட்டார். இதையே ஆண்கள் அணிக்கு வைத்துக்கொண்டோம் என்றால், விராட்கோஹ்லிக்கு காயம் ஏற்பட்டு அடுத்த போட்டிக்கு தயார் ஆகிவிட்டார். அதற்காக அவரை நாக்-அவுட் சுற்றிலிருந்து நீக்கி விடுவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாக்-அவுட் போட்டிகளில் நீங்கள் சிறந்த ஒரு வீரரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மிதாலிராஜ் போன்று நிபுணத்துவம் மற்றும் அனுபவமிக்க ஒரு வீரரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எதுவும் தெரியாமல் பயிற்சியாளர் பவாரின் பங்களிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது கடினம். ஆனால் மிதாலிராஜை நீக்கியிருப்பது தவறு. அங்கு பவாருடன் என்ன நடந்தது என்பது தெரியாமல், இங்கிருந்து கருத்து கூறுவது கடினம்.

அவர்கள் கூறியிருக்கிறார்கள், அணியுடன் மிதாலிராஜ் ஒத்துவரவில்லை என்று. இது நல்ல கருத்தென்று நான் நினைக்கவில்லை. மிதாலி ராஜ் போன்ற ஒருவரை நீங்கள் கைவிட முடியாது என கூறியுள்ளா

Related posts: