மாலிங்க IPL விளையாடாத காரணத்தினை வெளியாக்கினார் ஹர்பஜன் சிங்!
Wednesday, April 26th, 2017
இந்திய பிரீமிய லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடாதிருக்கும் காரணத்தினை மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஹர்பஜன்சிங் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி ஐ.பி.எல் போட்டிகளில் லசித் மாலிங்க விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளிலும் மாலிங்க அதிகளவு உபாதைக்கு உள்ளாகியிருந்தார். அதனால் அவருக்கு அவரது பழைய பாணியில் பந்து வீசுவதற்கு சில போட்டிகளிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
“அது அவரது தீர்மானம். அவர் நினைக்கிறார் அவருக்கு ஓய்வு வேண்டும் என..பந்து வீச்சில் முன்னர் பாவித்த சிலசில நுட்பங்கள் மாலிங்கவிற்கு தற்போது புதிதாக இருக்கின்றதாக தோன்றுகிறது. அவர் அவரையே கௌரவிக்க வேண்டும்.. அவ்வாறே அவருக்கு காலம் கைகொடுக்கும். அணி சார்பில் அவருக்கு ஓய்வு வழங்க வேண்டும்.. ஏனெனில் அணி சார்பில் நாம் ஒன்றாக இருக்கின்றோம்.. மாலிங்க அவருக்கு தேவையான நேரத்தில் வந்து அணியுடன் சேரலாம்.. அவ்வாறே அவர் சாதிப்பார்..” என தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|