மாலிங்க சொல்லிய புதிய கதை!

உபாதைக்கு உள்ளாகியுள்ள சாமர கபுகெதரவிற்கு பதிலாக டில்சான் முனவீர ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளதாக அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
நாளைய போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மாலிங்க இதனை தெரிவித்திருந்தார்.மேலும் , தான் 2020ம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாட எதிர்ப்பார்த்துள்ளதாக மாலிங்க இதன் போது தெரிவித்துள்ளார்,அணியை இந்த தோல்வி மனப்பான்மையில் இருந்து மீட்க முயற்சிப்பதாக தெரிவித்த மாலிங்க , அணியில் திறமையான வீரர்கள் அநேகமானோர் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் , அந்த திறமைகளை பயன்படுத்தும் விதத்தில் பிரச்சினை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.தனது பிரதான நோக்கம் எதிர்வரும் இரண்டு போட்டிகளுக்கு முன்னால் அணி வீரர்களின் மனநிலையை சீர்செய்வதே என மாலிங்க தெரிவித்தார்
Related posts:
|
|