மலிங்கவுக்கு வாய்ப்பு இல்லை!

தென்னாப்பிரிக்காவுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கட் தொடரிலும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைத்துக் கொள்ளப்படமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருட ஆரம்பத்தில் காயமடைந்த அவர், ஐ.பி.எல். போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த நிலையில் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் அடுத்த வருடம் வரையில் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் தென்னாப்பிரிக்காவுடனான கிரிக்கட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது
Related posts:
இந்தியா- இங்கிலாந்து போட்டிகளின் அட்டவணை வெளியானது!
மேலும் இரு அமெரிக்க நீச்சல் வீரர்கள் நாடு திரும்பினர்!
உலக சாதனை படைத்த இயான் மோர்கன்!
|
|