மறுக்கிறார் மெஸ்ஸி!

Saturday, November 11th, 2017

ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியில் பிரதான முடிவுகளை தான் எடுப்பதாகக் கூறுவது தன்னை ஆத்திரமூட்டுவதாக, ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தா அணியினதும் ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவினது முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிச் சுற்று தகுதிகாண் போட்டியில் மூன்று கோல்களைப் பெற்று, உலக் கிண்ணத்துக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெறுவதை உறுதிசெய்த மெஸ்ஸி, பயிற்சியாளர்களைத் தெரிவுசெய்வதாகவும் கடந்த காலங்களில், குழாமில் யார் இடம்பெறுவது, இடம்பெறக்கூடாது என்பதில் தாக்கம் செலுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த மெஸ்ஸி, தன்னைப் பற்றிய நகைப்புக்கிடமான கருத்துகளை விமர்சித்ததுடன் பல விடயங்கள் மிக இலகுவாகக் கூறப்படுவதாக கூறியிருந்தார். எதையும் அறியாமல் கருத்துகள் வெளிப்படுத்தப்படுவதாகவும் இதனால் ஆத்திரமடைவதாகவும் தெரிவித்த மெஸ்ஸி, ஆனால் இவற்றுக்கெல்லாம் பழக்கப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.

Related posts: