போராடும் இலங்கை அணி!

Sunday, August 6th, 2017

இலங்கை அணிக்கும் சுற்றுலா இந்திய அணிகும் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது

போட்டியில் தமது 2வது இன்னிங்ஸிற்காக பொலோ ஒன் முறையில் துடுப்பாடி வரும் இலங்கை அணி இன்றைய 3ஆம் நாள் ஆட்டநேர நிறைவின் போது 2 விக்கட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணி ஆரம்ப விக்கட்டுக்களுக்காக திமுத் கருணாரத்தின மற்றும் உப்புல் தரங்க ஆகியோர் இணைந்த வேளை, உப்புல் தரங்க 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இணைந்த குசல் மென்டிஸ் 110 ஓட்டங்களை பெற்று கொடுத்து ஆட்டமிழந்தார்

போட்டியின் ஆட்டம் நிறைவடையும் போது, திமுத் கருணாரத்தின 92 ஓட்டங்களையும் மலிந்த புஸ்பகுமார 2 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது உள்ளனர்

முன்னதாக இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 622 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஆட்டத்தை நிறுத்தி கொண்டது

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.

Related posts: