போட்டித் தடையில் இருந்து விலகினார் அஷ்ரபுல்!

Wednesday, August 15th, 2018

2013ஆம் ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில், ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 05 ஆண்டுகள் சர்வதேச போட்டித் தடை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி வீரர் மொஹமட் அஸ்ரபுலின் தடை நிறைவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷ் அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என மொஹமட் அஸ்ரபுல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் 2016ஆம் ஆண்டில் இருந்து அவர் உள்ளூர் போட்டிகளில் பங்குபற்ற அனுமதி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அவர் டெஸ்ட் போட்டிகள் 66, ஒருநாள் போட்டிகள் 177 மற்றும் இருபதுக்கு – இருபது போட்டிகள் 23 ஆகியவற்றினை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: