புதிய மைல்கல்லை எட்டினார் விராட் கோஹ்லி!

Monday, October 23rd, 2017

விராட் கோஹ்லி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் போட்டி அவரின் 200-வது ஒருநாள் போட்டியாக அமையவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி கடந்த 2008-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன் முதலில் இந்திய அணிக்காக விளையாடினார்.

இன்று நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டி கோஹ்லிக்கு 200-வது போட்டியாக அமைந்துள்ளது.இதுவரை 199 போட்டிகளில் 55.13 என்ற சராசரியுடன் 8767 ஓட்டங்களை கோஹ்லி குவித்துள்ளார்.இதில் 30 சதங்களும்இ 45 அரைசதங்களும் அடக்கமாகும்.இந்திய ஜாம்பவான்கள் சச்சின் கங்குலிஇ டிராவிட் சேவாக் உள்ளிட்ட 13 இந்திய வீரர்கள் இதுவரை 200 அல்லது அதற்கு அதிமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 14-வது வீரராக அந்த மைல்கல்லை கோஹ்லி எட்டவுள்ளார்.உலகின் தலைசிறந்த வீரராக மட்டுமின்றி தலைசிறந்த அணித்தலைவராகவும் கோஹ்லி திகழ்ந்து வருகிறார்.இந்நிலையில்ஏசையவ200 என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில் டிரண்டாகி வருகிறது.

Related posts: