பாகிஸ்தான் வீரர் இரட்டை சதம் அடித்து சாதனை!

Saturday, July 21st, 2018

பாகிஸ்தான் – சிம்பாவே அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி, 244 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 399 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பக்கர் ஷமன் ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இமாம் உல் அக் 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் 400 என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடிய சிம்பாவே அணி, 42.4 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

Related posts: