பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளராக அஸார் மஹ்மூதுக்கு வாய்ப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் சகலதுறை வீரர் அஸார் மஹ்மூத் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, அந்நாட்டு கிரிக்கெட் சபையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதலில், வெளிநாட்டு பயிற்சியாளரைத் தான் நியமிப்பதென சபை முடிவு செய்திருந்தது. ஆனால், பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு, தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பரிந்துரைத்த நபர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமானதாக இல்லை.எனவே, தற்போது மீண்டும் அஸாரை தொடர்பு கொண்டுள்ள சபை, அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்து கலந்தாலோசித்து வருகிறது.
டுபாயில் அடுத்த மாதம் 13ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாக அஸார் ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.ஆசியக் கிண்ணம், டி20 உலகக் கிண்ணம், இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் அணிக்கு அஸார் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|