பாகிஸ்தான் அணி 143 ஓட்டங்களால் அபார வெற்றி!

Monday, April 2nd, 2018

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் கராச்சியில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ஓட்டங்களால்வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 5 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது. இந்த அணி சார்பில் ஹூசைன் தளட் 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்காடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

Related posts: