பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யாததற்கு ஐ.சி.சி. நிர்ப்பந்தமா?

Wednesday, December 7th, 2016

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுப்பட்ட முகமது ஆசிப் தான் பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யாததற்கு ஐ.சி.சி. நிர்பந்தம் காரணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2011-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது ‘ஸ்பாட்பிக்சிங்’ சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஆசிப், சல்மான் பட், முகமது அமீர் ஆகியோர் சிக்கினர்.

இதனால் 3 பேருக்கும் விளையாட தடை விதிக்கப்பட்டது. முகமது ஆசிப்புக்கு ஐ.சி.சி. 7 ஆண்டுகள் தடை விதித்தது. அதன்பின் அவர் 2015-ம் ஆண்டு முதல் விளையாட ஐ.சி.சி. அனுமதி அளித்தது. இதையடுத்து அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார்.

இந்த நிலையில் முகமது ஆசிப் அளித்த பேட்டியில் தான் பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறுகையில்,

சில தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளது. அது, பாகிஸ்தான் தேசிய அணியில் என்னை தேர்வு செய்ய பரிசீலிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கேட்டு கொண்டதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. நான் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறேன்.

7d6923col145631785_5075685_05122016_aff_cmy

 

Related posts: