பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து!

Friday, November 10th, 2017

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் 1859 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்தில் எட்டியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோலிவியை சந்தித்த நியூசிலாந்து அணி அடுத்த போட்டியில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை துவம்சம் செய்து தொடரை சமன் செய்தது.

இந்தியவுக்கு எதிரான 20 ஓவர்கள் தொடரை இழந்தாலும் சர்வதேச தர வரிசையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து அணி முதல் இடத்தில் எட்டியுள்ளது.

124 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், 2-வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளது. 4 மற்றும் 5-வது இடத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவும், 8-வது இடத்தில் இலங்கையும் உள்ளது.

Related posts: