பரபரப்பான ஆட்டம்: 5 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி!

Monday, January 23rd, 2017

கொல்கத்தாவில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 5 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன் படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 321 ஓட்டங்கள் எடுத்துள்ளது.தொடக்க வீரர் ஜாசன் ராய் (65), பேர்ஸ்டவ் (56), பென் ஸ்டோக்ஸ் (57) ஆகியோர்கள் அரைசதம் அடித்தனர்.

அணித்தலைவர் மோர்கன் 43 ஓட்டங்களும், கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய கிறிஸ் வோக்ஸ் 34 ஓட்டங்களும் சேர்த்தனர்.இந்திய அணி சார்பில், பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் ரஹானே (1), ராகுல் (11) ஏமாற்றினர்.

அடுத்து வந்த யுவராஜ் சிங், விராட் கோஹ்லி ஜோடி நம்பிக்கை அளித்தது. கோஹ்லி (55) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அடுத்து யுவராஜ் சிங் 45 ஓட்டங்களில் வெளியேறினார்.டோனி 25 ஓட்டங்கள் எடுத்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்ட்யா (56), கெதார் ஜாதவ் அரைசதம் அடித்தனர். கடைசி வரை போராடிய கெதார் ஜாதவ் 90 ஓட்டங்கள் எடுத்தார்.

ஜடேஜா (10), அஸ்வின் (1) நிலைக்கவில்லை. வெற்றியை நெருங்கினாலும், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 316 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.

இதனால் இங்கிலாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இருப்பினும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: