பந்துவீச்சில் பிரகாசிக்குமா இலங்கை!

Wednesday, August 24th, 2016

இலங்கை ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 48.5 பந்து ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 69 ஓட்டங்களையும், மெத்தியுஸ் 57 ஓட்டங்களையும், குசல் பெரேரா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆஸி அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க், போல்க்னர்,சாம்பா ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர். ஆஸி அணி வெற்றிபெற வேண்டுமாயின் 50 ஓவர்களில் 289 ஓட்டங்களை பெறவேண்டும். வெற்றி இலக்கை நொககி தடப்பெடுத்தாடிவரம் ஆஸி அணி 13 ஓவர்கள் முடிவில் 3 இலக்குகளை இழந்து 51 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிவருகின்றது.

Related posts: