பணத்திற்காக தான் கோஹ்லி கடைசி டெஸ்டில் விளையாடவில்லை – அவுஸ்திரேலிய வீரர் கருத்து!

Tuesday, March 28th, 2017

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஐ.பி.எல் தொடருக்காக தான் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாடவில்லை என அவுஸ்திரேலிய வீரர் பிராட் ஹாட்ஜ் சர்ச்சைக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்த அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் கூறியதாவது,தோள்பட்டைக் காயம் காரணமாக 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கோஹ்லி ஆடாததற்கு அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடரே காரணம்.

ஒரு விளையாட்டு வீரராக அவர் காயம் சீரியசானதே என்று நினைக்கத் தோன்றுகிறது, இரண்டு வாரங்களில் அவர் ஐபிஎல் முதல் போட்டியில் அவர் ஆடுவார் என்றே கருதுகிறேன், பலத்த காயம் என்றால் அவர் ஆடக்கூடாதுதானே. விராட் மட்டுமல்ல முன்பு வேறு சில வீரர்களும் இவ்வாறு செய்துள்ளனர்.

ஏனெனில் இது பணமழை தொடர். கோஹ்லிக்கு நிறைய பணம் கொடுக்கிறார்கள், எப்படியிருந்தாலும் அவருக்கு பணம் கிடைக்கிறது எனவே இது விஷயமல்ல என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Related posts: