பட்மிண்டன் இறுதிப் போட்டியில் சிந்து!

Friday, August 19th, 2016

நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானிய வீராங்கனை நோசாம்பி ஒக்குகாரவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதியில் வென்றதன் மூலம் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வெல்வது உறுதியாகியுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்று வந்த சிந்து, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டத்தில் 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் ஒக்குகாரவை தோற்கடித்தார்.

நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கெரோலினா மெரினை எதிர்கொள்கிறார் சிந்து.ஒலிம்பிக் விளையாட்டில், பேட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ள சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ” இந்தியாவை பெருமைப்படுத்தி விட்டாய். இறுதி ஆட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related posts: