பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் – இலங்கை அணி 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி – தொடரையும் வென்றது இலங்கை!

Wednesday, April 3rd, 2024

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் முழுமையாக இலங்கை அணி வெற்றிகொண்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

இதன்போது 511 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, பிரபாத் ஜெயசூர்ய 2 விக்கெட்டுகளையும் விஷ்வா பெர்னாண்டோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதேநேரம், இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2 – 0 எனும் அடிப்படையில் பங்களாதேஷ் அணியை வெள்ளையடிப்பு செய்துள்ளது.

இந்தநிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி தற்போது 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடதக்கது.

000

Related posts: