தோல்வியிலும் பாடம் கற்றுத்தந்த குரோசியா!

Monday, July 16th, 2018

வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிச் சென்ற வெற்றியை நேற்று இரவு வரை குரோசியா நாடு கொண்டாடியது. ஆனாலும் தோல்வியின் பின்னர் குரோசியாவின் புகழை உலகமே பேசுகின்றது.

இறுதிப்போட்டி மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. குரோசியா வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக வெற்றியை நழுவ விட்டாலும் உலகமே குரோசியா அணியை கொண்டாடுகின்றது.

இதற்கு காரணம் அவர்களின் விடா முயற்சி. உலகப் பந்தில் ஒவ்வெரு இனமும் சாதிக்க பிறந்த இனம். அந்த இனங்கள் கால ஓட்டத்தில் சோர்வடைவதை விடுத்து குரோசியா போன்று சவால்களை சிறந்த முறையில் எதிர் கொள்ள வேண்டும்.

குரோசியா மக்களின் வரலாறு எமக்கும் ஒரு வரலாற்றுப் படிப்பினையாகவும் அமைந்து விட்டது.

இதேவேளை, இது வரையும் பலருக்கு பெயர் தெரியாத நாடாக குரோசியா இருந்திருக்கலாம். ஆனால், இன்று தேல்வியிலும் குரோசியா வீரர்கள் வெற்றி கண்டுள்ளனர். பலருக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளனர். போட்டி முடிவடைந்த பின்னர் குரோசியா நாட்டின் ஜனாதிபதி குரோசியா அணித்தலைவரை தட்டிக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி அவர்களிடம் உள்ள ஒற்றுமையே அந்நாட்டை இவ்வளவு வேகமாக கட்டி எழுப்ப காரணமாக அமைந்தது என அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.

இது எமது இனத்திடம் எவ்வளவு உள்ளது என்று நாம் ஒவ்வெரு ஆராந்து பார்ப்பது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது.

போராட்டம் தமிழருக்கு பழகிப்போன ஒன்றாக இருந்தாலும் குரோசியாவிடம் காணப்படும் ஒற்றுமை எம்மினத்திடம் ஆழ்ந்த கருத்தை புலப்படுத்துகின்றது.

Related posts: