தென் ஆபிரிக்க அணி 5 விக்கட்களினால் வெற்றி!

Monday, October 1st, 2018

தென்னாபிரிக்காவுக்கும், ஸிம்பாப்வேவுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கட்களினால் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்காவின் கிம்பெர்லேயில்  இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, 34.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது

இதையடுத்து, பதிலளித்தாடிவரும் தென்னாபிரிக்க அணி 26.01 ஓவர்களில் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Related posts: