டோனியை நீக்கியதில் மகிழ்ச்சி- வீரேந்திர சேவாக்!

Thursday, February 23rd, 2017

டோனியை ரைஸிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கியதில் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக பஞ்சாப் அணியின் ஆலோசகர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.டோனி, ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 20ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் அணித்தலைவர் பதவிகளை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில்,  ரைஸிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்,

இந்திய கிரிக்கெட் கண்ட மிகச்சிறந்த அணித்தலைவர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.டோனி எனபுகழாரம் சூட்டிய சேவாக், புனே அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து அனுபவம் வாய்ந்த டோனி நீக்கப்பட்டுள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

காரணம், இதன் மூலம் ஐ.பி.எல் 10வது சீசனில் புனே அணியை தங்களது பஞ்சாப் அணி எளிதில் வீழ்த்திவிடும் என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அணித்தலைவர் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா, அணித்தலைவர் பொறுப்பில் இருந்து டோனி பதவியிறக்கம் செய்யப்படவில்லை என்றும், கடந்த 10 போட்டிகளில் அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லாததால் இளம் வீரர் ஒருவர் அணித்தலைவர் பொறுப்பிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Virender-Sehwag-of-Gemini-Arabians

Related posts: