டோனியின் திடீர் முடிவு குறித்து முரளிதரன் கருத்து!

Tuesday, January 10th, 2017

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். அது கிரிக்கெட் ரசிகர்கர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் டோனியின் இந்த முடிவு சரியானது என்றும் இனிமேல் அவரை பழைய டோனியாக பார்க்கலாம் என்று கருத்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் டோனி குறித்து கூறுகையில், இந்திய அணியின் மிகச் சிறந்த தலைவர்களில் டோனியும் ஒருவர் என கூறியுள்ளார். அவர் தலைமையில் சுமார் 3 வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன்.

அப்போது அவர் தான் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது போல் காட்டிக் கொள்ளமாட்டார் என்றும் மூத்த வீரர்களான ஹசி மற்றும் தன்னிடம் நிறைய ஆலோசனைகளை கேட்டறிந்து கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் டோனி தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்பு கோஹ்லிக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது என்றும் ஆனால் அவர் மிகச்சிறந்த துடுப்பாட்டக்காரராக ஜொலிப்பார் என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணிக்கும் ஒரு நாள் அணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது என்றும் இது கோஹ்லிக்கு சவாலாக இருக்கும். இருந்த போதிலும் டோனி அணியில் இருப்பதால் அவருடைய ஆலோசனைகளை கோஹ்லி கேட்டறிவார் என்று கருதுவதாக கூறியுள்ளார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: