டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவு; அமெரிக்கா முதலிடம்!

Monday, August 9th, 2021

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020′ நிறைவடைந்த நிலையில், இறுதி பெறுபேறுகளுக்கு அமைய அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது.

அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று மொத்தமாக 113 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 88 பதக்கங்களை பெற்றது.

‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020’ போட்டிகளை நடத்திய ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 58 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் 22 தங்கம் உட்பட மொத்தமாக 65 பதக்கங்களை பெற்று பெரிய பிரித்தானியா நான்காவது இடத்திலும் 20 தங்கம் உட்பட மொத்தமாக 70 பதக்கங்களை பெற்று ரஷ்ய ஒலிம்பிக் குழு ஐந்தாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, கனடா ஏழு தங்கம், ஆறு வெள்ளி, 11வெண்கலம் உட்பட 24 பதக்கங்கங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: