டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் டிரைவிங் செய்ய தடை!

Saturday, May 11th, 2019

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைசிறந்த முன்னாள் தலைவரான டேவிட் பெக்காம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ப்ரோம்லி நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே டேவிட் பெக்காம் குற்றவாளி என்று கோர்ட் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அவருக்கு ஆறு மாதம் டிரைவிங் செய்ய கோர்ட் தடைவிதித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். ஆனால் டேவிட் பெக்காம் நேரில் ஆஜராக வேண்டும் என்பதால் தீர்ப்பு தள்ளிப்போகி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Related posts: