டேரன் சமி பதவியிலிருந்து நீக்கம்!

Saturday, August 19th, 2017

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஷாந்த லூசியா அணியின் தலைவர் டேரன் சமியை தலைமைப் பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக அணி தோல்வியினை தழுவிய நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார். இம்முறை கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 06 போட்டிகளில் விளையாடிய ஷாந்த லூசியா அணி இதுவரை எவ்வித வெற்றியினையும் பெறவில்லை.

அதன்படி, ஷாந்த லூசியா அணியின் தலைமை அவுஸ்திரேலியா அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் இனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: