டூபிளஸிஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் சிறுபிள்ளைத்தனமானது!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது, டூபிளஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சிறுபிள்ளைத்தனமானது என தென்னாபிரிக்க அணியின் நம்பிக்கை வீரர் ஹாசீம் அம்லா தெரிவித்துள்ளார்.
ஹாபர்ட்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணியின் தலைவர் டூபிளஸிஸ், வாயில் வைத்திருந்த ஒருவகையான இனிப்பு வகையை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால், இதுவரையும் டூபிளஸிஸ் இதற்கு பதிலளிக்காத காரணத்தால், அவுஸ்திரேலிய ஊடகங்கள் டூபிளஸிசை கடுமையாக சாடி வருகின்றது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அம்லா கூறுகையில், டூபிளஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக சுமத்தம் குற்றச்சாட்டுக்கள் நகைப்பிற்குரியது. அணித் தலைவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையும் அற்றவை.
பந்தை காயப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் மூலம் அணிக்கு சாதக நிலைமையை ஏற்படுத்தி வெற்றியீட்ட வேண்டிய அவசியம் எதுவும் எமக்க இருக்கவில்லை என கூறியுள்ளார்.
Related posts:
|
|