டி20 தொடரில் இருந்தும் மேத்யூஸ் விலகல்: இலங்கை அணிக்கு மேலும் நெருக்கடி!

இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் மேத்யூஸ்க்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதேபோல் பவுன்சர் பந்து தலையில் தாக்கியதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிலையில் அவர் நாளை பல்லேகேலவில் நடக்கவிருக்கும் கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் அவர் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
4வது போட்டியில் அணித்தவைர் மேத்யூஸிக்கு பதிலாக உபுல் தரங்க அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும், அணித்தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை 3-1 என இழந்துள்ளது. இந்த நிலையில் டி20 தொடரில் இருந்தும் மேத்யூஸ் விலகி இருப்பது இலங்கை அணிக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
|
|