டிராவிட்டின் சாதனையை சமன் செய்தார் ரஹானே!

Tuesday, June 27th, 2017

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ரஹானே சதம் பெற்றதன் மூலம்  முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட்டின் 11 ஆண்டு சாதனையை சமன் செய்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு T20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப வீரர் ரஹானே சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச அளவில் ரஹானே பதிவு செய்த மூன்றாவது சதமாகும். தவிர மேற்கிந்திய தீவுகள் மண்ணில் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட்டுக்கு பின் சதம் அடித்த இரண்டாவது இந்திய ஆரம்ப வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய முன்னாள் ராகுல் டிராவிட் சதம் அடித்தார். அதன் பின் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரஹானே சதம் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: