டக்வத் லுயிஸ் முறைப்படி வெற்றி!

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணியை வெற்றிக்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.பதிலளித்த பாகிஸ்தான் அணி 27 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.இதன்படி, இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதனிடையே இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது
Related posts:
ஒலிம்பிக் போட்டிக்கான தீபச் சுடர் வியாழனன்று ஏற்றப்படும்!
BPL-ல் விளையாட அசேல குணரட்னவிற்கு வாய்ப்பு!
மீண்டும் இலங்கை அணி படுதோல்வி!
|
|