ஜொலிஸ்ரார் அபார வெற்றி!

Friday, May 4th, 2018

ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்தும் கூடைப்பந்தாட்டத் தொடரில், நேற்றுமுன் தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் ஜொலிஸ்ரார் அணி வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் ஜொலி ஸ்ரார் அணியை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி மோதி¬யது.

நான்கு கால்பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் இடம்பெற்றது. முதலாவது கால் பாதியில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி 16:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இரண்டாவது கால் பாதியும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணியிடம் 14:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் சென்றது.

முதல் பாதியின் முடிவில் 30:27 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி முன்னிலை வகித்தது.மூன்றாவது கால் பாதியை 16:01 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது ஜொலி ஸ்ரார்.

நான்காவது பாதியில் பல்கலைக் கழக அணி 18 புள்ளிகளையும், ஜொலி ஸ்ரார் அணி 16 புள்ளிகளையும் பெற்றன.முடிவில் 59:49 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி.

Related posts: