ஜொலிபாய்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது கிறாஸ்கொப்பர்ஸ் தெரிவு அணி!

Wednesday, April 19th, 2017

கிறாஸ்கொப்பர்ஸ் பிறிமியர் லீக் தெரிவு இணி மலேசியாவில் நடைபெற்ற ஜொலிபாய்ஸ் கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை சவீகரித்துக்கொண்டது.

கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற இப்போட்டி அணிக்கு 7 வீரர்களையும் 6 பந்து பரிமாற்றங்களையும் கொண்டதாக நடைபெற்றது.

இதன் இறுதியாட்டம் கடந்த நனிக்கழமை நடைபெற்றது. இவ் ஆட்டத்தில் மெல்பொர்ன் அணியை எதிர்த்து கிறாஸ் கொப்பர்ஸ் பிறிமீயர் லீக் தெரிவு அணி மோதியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக் தெரிவு அணி 6 ஓவர்கள் நிறைவில் 77 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ர்டுப்பெடுத்தாஎய மெல்பேர்ண் அணி 54 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையம் இநந்தது இதனால் 23 ஓட்டங்களினால் கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக் தெரிவு அணி வெற்றி பெற்று சாம்பியனானது.

அரையிறுதி ஆட்டத்தில் கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக் தெரிவு அணி லண்டன் ஜொலிபாஸ் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக் தெரிவு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்களினைப் பெற்றது. இதில் கஜானன் 28 கஜந்தன் 20 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலண்டன் ஜொலிபாய்ஸ் அணி 78 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தோல்வியைத் தழுவியது

Related posts: