சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!

Thursday, March 15th, 2018

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 26 பந்துகளில் சகல இலக்குகளையும் இழந்து ஓர் ஓட்டத்தை மாத்திரம் பெற்றது. ரதீசன் அடுத்த ஓட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணி ஓட்டமெதனையும் பெறாமல் சகல இலக்குகளையும் இழக்க ஓர் ஓட்டத்தால் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்று கிண்ணம் வென்றது. மூன்றாமிடத்தை கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலய அணி பெற்றது.

Related posts: