சென்னை அணியின் 100 வது வெற்றி பதிவு!

Saturday, May 11th, 2019

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

டெல்லி கெப்பிரல்ஸ் அணியுடன் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் இரண்டாவது அணிக்கான தெரிவுப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி, 19 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றின் ஊடாக சென்னை அணி, ஐ.பி.எல் தொடரில் தனது 100ஆவது வெற்றியை பதிவுசெய்தது.

Related posts: